திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடல் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. பாறைகள் வெளியே தெரிந்த நிலையில், ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறைகள் மீது ஏறி செல்பி எடுத்தனர்.