தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானியும் அவரது தந்தையும் உயிரிழந்தனர்.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லாலும் அவரது மகள் அஸ்வினியும் வீட்டில் இருந்து, ஐதராபாத்தில் உள்ள சம்சாபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆக்கேடு ஓடை தரைப்பாலத்தை கார் கடந்து சென்றபோது, தண்ணீரில் சிக்கியது. இதில், அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.