மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஆதரவின்றி தவித்த 22 பேர் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்த பொதுமக்களுக்கு 1,000 கிலோ உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.