பஞ்சாப் மாநிலம் ஃபெரோஷ்பூரில் கார் மீது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டதாகவும் காவல்துறை டிஐஜி தெரிவித்துள்ளார்.