சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் செல்போன் மற்றும் தொலக்காட்சியால் தான் வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததையடுத்து, சுவீடனில் குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.