விஜயவாடா- செகந்திராபாத் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள இண்ட்டிகன்னே சமுத்திரம் அருகே கனமழை, வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
36 மணி நேரத்தில் ரயில் தண்டவாளத்தை அதிகாரிகள் சீரமைத்து சோதனை ஓட்டம் நடத்தினர்.