தென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவர் தான் வைத்திருந்த நகை பையை பேருந்தில் தவறவிட்டுவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அவர் தேனியில் புகாரளித்த நிலையில், 10 பவுன் தங்க நகைகளை அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீட்டு சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தேனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரின்ஸ்டன் புரூனோவிடம் நகை ஓப்படைக்கப்பட்டது.
அப்போது நேர்மையுடன் நகையை ஓப்படைத்த டிரைவர், நடத்துனர் மற்றும் டிப்போ காவலாளிக்கு பரிசுகள் வழங்கி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கௌரவித்தார்.