அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாடே வளர்ச்சியே தமது லட்சியம் என்றும், டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கே வரிச்சலுகை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டு வந்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கருக்கலைப்பு விவகாரத்தில் ஒரு பெண் எடுக்க வேண்டிய முடிவு பற்றி கருத்து கூறும் அதிகாரம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார். மேலும், மக்களுக்கு அவர்களின் உடல் சார்ந்த விஷயங்கள் பற்றி முடிவு செய்ய சுதந்திரம் உள்ளது எனவும் கூறினார்.
இதனைதொடர்ந்து பேசிய டிரம்ப், பைடன் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததாகவும், பண வீக்கத்தால் அமெரிக்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடுவார் என கடுமையாக தாக்கி பேசினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.