தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
அதிராம்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் வயது என்பவருக்கு திருமணமாகி வசுந்தரா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற வசுந்தரா குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இருதரப்பும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்தனர்.