உத்தரகண்டில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.
வரும் நவம்பர் 9-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முந்தைய தினம் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.