தாம் உள்துறை அமைச்சராக இருந்தபோது காஷ்மீர் செல்ல பயப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த நிலையில், அக்கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவ், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு நிலைமை மேம்பட்டதாகவும், ஆண்டுக்கு 3 கோடி பேர் காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதாகவும் கூறினார்.