எகிப்தில் நடைபெற்ற சர்வதேச தகவலியல் ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் அகஸ்தியா கோயல் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மிகவும் கடினமான தகவலியல் ஒலிம்பியாட் போட்டியில், 600-க்கு 438.97 மதிப்பெண்கள் பெற்று அவர் சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அகஸ்தியா கோயல் தங்கம் வெல்வது 2-ஆவது முறை என தெரியவந்துள்ளது.
அவரது தந்தை ஆசிஷ் கோயல், 1990-இல் ஐஐடி நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.