பிரேசிலில் நிலவியுள்ள கடும் வறட்சியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காட்டில் காட்டித் தீ பரவி வருகிறது.
இதனால் சாவ்பாலோ உள்ளிட்ட எல்லை நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அந்நாட்டில் கடந்த 70 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் மற்றும் வறட்சியும் நிலவி வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.