கோவையில் நடைபெற இருந்த ஃபார்முலா-4 கார் பந்தயம் மீண்டும் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டி சென்னை இருங்காட்டுகோட்டையில் நடைபெற்றது. இந்த பந்தயத்தின் 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3-வது சுற்று கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த சுற்று மீண்டும் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் நடத்தப்படும் என RPPL நிறுவனம் அறிவித்துள்ளது.