இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வாகன உபகரண உற்பத்தியாளர்கள் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதில் 19 பேர் மரணமடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை தொடங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனக்கூறிய அவர், நல்ல ஓட்டுநர்கள் உருவாக்கினால்தான் விபத்துகளை குறைக்க முடியும் என குறிப்பிட்டார்.