சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் கிளப் குத்தகை விதிமுறைகளை மீறியதாகவும், 730 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் கூறி ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி அதிகளவு இருக்கும் நிலையில், கிண்டியில் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்குகள் நிறைவடைந்த பிறகு புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.