ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் குறுகிய தூர இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு மற்றும் கடற்படை சார்பில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. விண்ணை நோக்கி சீறிய ஏவுகணை, குறித்த நேரத்தில் இலக்கை எட்டியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதனையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளுக்கும், கடற்படை அதிகாரிகளுக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.