உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், விக்கிரவாண்டி இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிகளை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சாவூர், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என தெரிவித்தார்.
தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் பல சாலைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிப்பதாகவும் தெரிவித்தார்.