கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 2000 ஆண்டு முதல் 2007 -ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற 100-க்கும் மேற்பட்டோர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பின்னர், தாங்கள் கல்வி பயின்ற வகுப்பு அறைகளை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.