தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரபல விமர்சகரும், மருத்துவருமான காந்தராஜ், சினிமாத்துறை தொடர்பான பல்வேறு கருத்துகளை யூடியூப் சேனல்களுக்கு அளிக்கும் பேட்டி மூலம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் தமிழ் நடிகைகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள் திரைத்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
வாய்ப்புக்காக விரிக்கப்படும் வலையில் நடிகைகள் சிக்குவதாக தெரிவித்த அவர், சில நடிகைகளை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவரான நடிகை ரோகிணி, காந்தராஜ் குறித்து சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் காந்தராஜ் மீது ஆபாசமாக பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.