ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்- வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.