கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நீர் குட்டைக்குள் இருக்கும் முதலையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கடந்த முறை பெய்த பருவமழை காரணமாக மழை தண்ணீரில் அடித்து வரப்பட்ட முதலை பட்டக்காரனூர் குட்டையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் 24 மணி நேரத்தை கடந்தும் முதலையை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.