சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அருகே குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பண்ணப்பட்டி பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.