நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 7ஆம் தேதியன்று யூடியூப் சேனல் ஒன்றில் மருத்துவர் காந்தராஜ், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நடிகை ரோகிணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காந்தராஜ் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சமனின் அடிப்படையில் காந்தராஜ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.