சேலம் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் ரயில் நிலையத்தில் போலீசார் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் வந்திறங்கிய இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி நடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் தேனியை சேர்ந்த முகமது இசாக் என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.