நாகை அருகே மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்தை சென்றடைந்தார்.
இந்நிலையில் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்காமல் புறக்கணித்த சம்பவம் கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மீன்வள பொறியியலில் தங்க பதக்கங்கள் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.