டெல்லியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்டனர்.
டெல்லி கரோல் பாக் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.