தெலங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.
இதனால் மழைக்காலங்களில் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறையும் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து புதுமையாக யோசித்த மாவட்ட ஆட்சியர், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளியை உருவாக்கி அசத்தியுள்ளார்.
25 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட இந்த கண்டெய்னர் பள்ளியை, அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்கா திறந்து வைத்து பாடம் எடுத்தார்.