ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்ப, நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் ஆகஸ்ட் 6-ம் தேதி துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் முதன்முறையாக லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.