தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஆரியங்காவு கருப்பசாமி கோயிலில் பூக்குழி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆவணி மாதம் பூக்குழித் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அந்த வகையில், காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
2-ம் நாளன இன்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், பூக்குழியில் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.