நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தார்.
நாகை மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பாதிரியார்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பேராலயத்தில் தனது குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.