அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சில வாரங்களில் தனது முதலமைச்சர் பங்களாவை காலி செய்வார் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சஞ்சய் சிங், சதிகளின் காரணமாக கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஒரு சில வாரங்களில் புதிய இடத்துக்கு மாறும் கெஜ்ரிவால், சட்டப்பேரவை தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று பெரும்பான்மை சான்றிதழைப் பெற்ற பிறகு முதல்வர் நாற்காலியில் அமர்வார் எனவும் கூறினார்.