சேலம் கடை வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ஆயிரத்து 8 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 10 நாட்களாக காலை, மாலையில் பல்வேறு அலங்காரங்களில் திரு வீதி உலா நடந்தது.
விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் கடைசி நாளான இன்று விநாயகருக்கு சாத்துப்படி நடைபெற்றதை தொடர்ந்து ஆயிரத்து 8 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.