புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பந்த் காரணமாக புதுச்சேரி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி மாநகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட 500க்கும் மேற்பட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, கோரிமேடு பகுதியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீசிய நபரை தேடி வருகின்றனர்.