நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவானது இரண்டு கட்டங்களாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.