மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.