போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்தாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கான குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.