கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் அங்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த உணவுப்பஞ்சத்தை சமாளிக்கும் நோக்கில் இறைச்சிக்காக 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்திருந்தது. அதேபோல் ஜிம்பாப்வேவும் 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளது.