ஸ்வீடனில் மின் சக்தியில் இயங்கும் ஹைட்ரோஃபாயில் படகு 24 மணி நேரத்தில் 777 கிலோ மீட்டர் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
சி-8 என்ற புதுமையான தொழில் நுட்பத்தின் மூலம் தண்ணீர் பரப்புக்கு மேலே செல்லும் வகையில் இந்தப் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் மற்றும் அலண்ட் என்ற தீவுக்கு இடையே மணிக்கு 17 நாட்டிகல் மைல் வேகத்தில் இந்த படகு பயணித்துள்ளது.
மேலும் வழக்கமான மின்சார படகுகளை விட 80 சதவீதம் குறைவான சக்தியில் இந்த படகு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.