டப்பர்வேர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதால் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
லஞ்ச்பேக், லஞ்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் டப்பர்வேர் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவில், 1946-ம் ஆண்டு எர்ல் டப்பர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கொரோனா பேரிடருக்கு பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவால் கடந்த ஆண்டு ஜூனில் தொழிற்சாலையை மூடப்போவதாக அறிவித்தது.
தற்போது டப்பர்வேர் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.