சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Rollable டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக நாள்தோறும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது Rollable டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் இந்த ஸ்மார்ட் போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.