ஒன் பிளஸ் நிறுவனம் தனது புதிய NORD BUDS 3 இயர் பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஒன் பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புது புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனது புதிய தயாரிப்பான NORD BUDS 3- இயர் பட்ஸில் கூகுள் ஃபாஸ்ட் பேர், 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பாஸ்வேவ் 2.0 போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.
ஹார்மோனிக் கிரே மற்றும் மெலோடிக் WHITE நிறங்களில் கிடைக்கும் இந்த மாடலின் விலை 2 ஆயிரத்து 299 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.