பெண் நடன இயக்குநர் அளித்த பாலியல் தொடர்பாக பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானியை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு பட உலகில் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக வளம் வருபவர் ஜானி மாஸ்டர். அவர் மீது நடன பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜானி மாஸ்டர் தலைமறைவானார்.
ஹைதராபாத் போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து இன்று ஹைதராபாத் அழைத்து வந்தனர்.
தமிழில் பீஸ்ட், விருமன், வாரிசு, ஜெயிலர் உள்பட பல்வேறு படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது