திருப்பதி லட்டின் புனிதத் தன்மையை தாங்கள் மீட்டெடுத்து விட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திரத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்தக் கறையை போக்கிவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ஸ்ரீவாரி லட்டின் புனிதத்தை காக்க தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக கூறிய தேவஸ்தானம், எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளது.