திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை கோர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தகுதி கிடையாது என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம், இந்து மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர பிரதேச ஆளுநர் அப்துல் நஷீரை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, சிபிஐ போன்ற அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், லட்டில் கலப்படம் செய்யப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என தெரிவித்தார். ஒரு கிலோ நெய் 320 ரூபாய்க்கு வாங்கியதன் மூலம் அதன் தரத்தை அறிய முடிகிறது எனவும் கூறினார்.