ஈரோட்டில் ஜவுளிக் கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை செய்யப்பட்டதால் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்று விரிவுபடுத்தப்பட்ட நிலையில், கடை திறப்பின்போது மலிவு விலையில் ஜவுளி விற்பனை நடைபெறும் என்று அறிவத்தது.
அதன்படி, கடை திறப்பு நாளில் டி ஷர்ட் 50 ரூபாய்க்கும், ஷர்ட் 100 ரூபாய்க்கும், பேண்ட் 250 ரூபாய்க்கும் பெண்களுக்கான டாப்ஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலையில் ஜவுளிகள் விற்கப்பட்டதால் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கடை முன் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.