சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காவல்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளைஞரைக் கத்தியால் குத்திய விவகாரத்தில் நாகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகபாண்டியன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.
அப்போது காவல்துறை பிடியில் இருந்து தப்பிக்க முயன்றதால் சண்முகபாண்டியனுக்கு கால் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறையினர்தான் அவரது காலை உடைத்ததாக குற்றஞ்சாட்டி, பரமக்குடி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.