நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு சுமார் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுக்கோட்டையில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
நவராத்திரி பண்டிகை அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு கடைகளில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.