சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாதென, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் சார்பில் வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதத்தையும், இந்து தர்மத்தையும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என கூறினார். அழிக்க முடியாத சனாதன தர்மத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பல்வேறு தெய்வங்களை வழிபடுவதை வைத்து சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.