மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஏசி பெட்டியின் மேல் படுக்கையில் திடீரென பாம்பு ஊடுருவியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையறிந்த ரயில்வே நிர்வாகம், பாம்பை பத்திரமாக மீட்டது. பின்னர், அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஏசி பெட்டி விடுவிக்கப்பட்டு மீண்டும் ஜாபல்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.